வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 1 ஜூன் 2023 (14:55 IST)

Anime ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்..! இந்தியாவில் கடை விரித்த Animax OTT!

Animax
பிரபல ஜப்பானிய அனிமே தொடர்களை ஒளிபரப்பும் அனிமேக்ஸ் ஓடிடி நிறுவனம் ப்ரைம் வீடியோவுடன் இணைந்து இந்தியாவில் தனது தொடர்களுக்கான ஓடிடி சேவையை தொடங்கியுள்ளது.



இந்திய பொழுதுபோக்கு சந்தையில் கடந்த சில காலமாக ஜப்பானிய அனிமெ தொடர்கள், திரைப்படங்கள் கோலோச்ச தொடங்கியுள்ளன. சமீபத்தில் ஜப்பானிய இயக்குனர் மகாடோ ஷின்காய் இயக்கத்தில் வெளியான ‘சுஸுமே’ என்ற அனிமே திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.10 கோடி வசூலித்துள்ளது.

அதுபோல Sony Liv ல் ஒளிபரப்பாகி வரும் Naruto தொடருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். இந்நிலையில் ஜப்பானிய அனிமே தொடர்கள் பலவற்றை தயாரித்த KC Global media, AXN Asia, GEM, Animax ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அவர்களது அனிமே தொடர்களை ஓடிடி வழியாக இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.

ஓடிடி சேவையில் ப்ரைமுக்கு நிகராக இந்தியாவில் போட்டியிட்டு வரும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் My Hero Academia, Jujutsu Kaisen, Vinland Saga, Demon Slayer உள்ளிட்ட பிரபலமான அனிமே தொடர்களை கைவசம் வைத்துள்ளதால் பல அனிமே ரசிகர்களை ஈர்த்து வருகின்றனர்.

Animax prime video


இந்நிலையில் அனிமேக்ஸுடன் இணைந்து அனிமெ தொடர்களை வழங்கும் ப்ரைம் வீடியோ அதற்கு மிகவும் குறைந்த வருடாந்திர சந்தாவை அறிவித்துள்ளது. ப்ரைமில் அனிமேக்ஸ் மற்றும் பல நிறுவனங்களின் அனிமெ தொடர்களை காண வருடத்திற்கு ரூ.299 செலுத்தினால் போதும்.

ப்ரைம் அறிவித்துள்ள இந்த சலுகை பல அனிமே ரசிகர்களை ஈர்த்துள்ளது. தவிரவும் அனிமேக்ஸில் Fruit Basket, 7 Deadly sins, Yashahime: Princes Half demon உள்ளிட்ட பிரபலமான அனிமே தொடர்கள் கைவசம் உள்ளன. இதுதவிர Outsiders Cops, Avalanche உள்ளிட்ட பிரபல ஜப்பான் சீரியல் தொடர்களும் இந்த ஓடிடியில் காண கிடைப்பது கூடுதல் சிறப்பு.

Edit by Prasanth.K