வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 மே 2023 (10:11 IST)

மீண்டும் மரணத்தோடு விளையாடும் ஈதன் ஹண்ட்! – Mission Impossible 7 தமிழ் ட்ரெய்லர்!

Mission Impossible 7
ஹாலிவுட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் Mission Impossible Dead Reckoning – Part One படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகியுள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் நடித்து தொடர்ந்து வெளியாகி வரும் பட வரிசை ‘மிஷன் இம்பாசிபிள்’. 1996ல் இதன் முதல் பாகம் வெளியான நிலையில் இதுவரை மொத்தம் 6 பாகங்கள் இந்த படவரிசையில் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் ரசிகர்களிடையே புகழ்பெற்றுள்ள இந்த மிஷன் இம்பாசிபிள் சிரிஸின் 7 வது பாகமான Mission Impossible Dead Reckoning – Part One இந்த ஆண்டு வெளியாக உள்ளது. 2 பாகங்களாக வெளியாகும் இந்த டெட் ரெக்கோனிங் இந்த மிஷன் இம்பாசிபிள் சிரிஸின் கடைசி படங்கள் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது Mission Impossible Dead Reckoning – Part One திரைப்படத்தின் அனைத்து மொழி ட்ரெய்லர்களும் வெளியாகி பெரும் வைரலாகியுள்ளது. இதில் டூப் இல்லாமல் ஒரு மலை மேலிருந்து பைக்கில் தாவி ஸ்டண்ட் செய்துள்ளார் டாம் க்ரூஸ்.

இதுவரை முடிக்கவே முடியாத பல மிஷன்களை முடித்த கதாநாயகன் ஈதன் ஹண்ட் இந்த முறை தன் காதலியை காப்பாற்ற ஒரு மிஷனை கையில் எடுப்பதாக தெரிகிறது. அவருக்கு வழக்கம்போல அவரது குழுவினர் உதவிகள் செய்கின்றனர். ஹாலிவுட் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான படமாக இது அமையும் என்பது உறுதி.

Edit by Prasanth.K