1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By
Last Updated : சனி, 26 மே 2018 (18:58 IST)

பிரபல ஹாலிவுட் நடிகர் மீது 16 பெண்கள் பாலியல் புகார்

பிரபல ஹாலிவுட் நடிகர் மார்கன் ப்ரீமேன் மீது 16 பெண்கள் பாலியல் புகார் கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
இந்தியாவில் தற்போது ஹாலிவுட் படங்கள் பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிரது. பெரும்பாலான பிரபல ஹாலிவுட் ஹீரோக்களை எல்லோருக்கும் தெரியும். அந்த வரிசையில் ஹாலிவுட்டின் குணச்சித்திர நடிகரான மார்கன் ப்ரீமேனையும் அனைவருக்கும் தெரியும்.
 
அதிக படங்களில் நடித்தவர் என்ர முறையிலும் பல காலமாக தோற்றத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லாதவர் என்ற முறையிலும் உலகம் முழுவதும் அனைவராலும் ஈர்க்கப்பட்டனர். இவர் ஹாலிவுட்டின் சிறந்த நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
50 வருடங்களுக்கு மேலாக சினிமா துறையில் உள்ளார். 80 வயதாகும் இவர் மீது 16 பெண்கள் பாலியல் புகார் கொடுத்துள்ளனர். அந்த பெண்களுடம் இவர் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் என்னால் அசவுகரியத்துக்கு உள்ளான பெண்களிடம் வருத்த தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.