1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

சுவைதரும் காளான் 65 செய்ய வேண்டுமா...?

தேவையான பொருட்கள்:
 
காளான் - 200 கிராம்
அரிசி மாவு - 100 கிராம்
கார்ன் ப்ளார் மாவு - 25 கிராம்
மல்லிப் பொடி - 2 ஸ்பூன்
கரம் மசாலா பொடி - 2 ½ ஸ்பூன்
மிளகாய் வற்றல் பொடி - 2 ஸ்பூன்
இஞ்சி - ஆட்காட்டி விரல் அளவு
பூண்டு - 5 எண்ணம் (பெரியது)
மஞ்சள் பொடி - தேவையான அளவு
சீரகம் - ½ ஸ்பூன்
மிளகு - ½ ஸ்பூன்
தயிர் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு 

செய்முறை:
 
முதலில் காளானை நன்கு கழுவி சிறு துண்டுகளாக்கவும். இஞ்சி மற்றும் பூண்டு இவற்றுடன் சிறிதளவு தயிர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். சீரகம், மிளகு இரண்டையும் தண்ணீர் சேர்க்காமல் பொடித்துக் கொள்ளவும்.
 
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கார்ன்ப்ளார் மாவு, தனியாப்பொடி, கரம்மசாலா பொடி, மிளகாய் தூள், மஞ்சள்பொடி, மிளகு மற்றும் சீரகப் பொடி, தேவையான உப்பு  ஆகியவற்றை போட்டு கலந்து கொள்ளவும். பொடி வகைகளுடன் இஞ்சி பூண்டு விழுது, தயிர் ஆகியவற்றை சேர்க்கவும்.
 
பின் அதனுடன் சிறுதுண்டுகளாக்கிய காளானை சேர்த்து ஒரு சேர பிசையவும். காளான் கலவை கெட்டியாக இருக்கும். இதனை அரை மணிநேரம் ஊறவிடவும். பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும் காளான் கலவை துண்டுகளைப் போட்டு எடுக்கவும். சுவையான  காளான் 65 தயார்.