வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

சுவையான மலாய் பன்னீர் கிரேவி செய்ய !!

தேவையான பொருட்கள்:
 
பன்னீர் - 200 கிராம் 
எண்ணெய் - 4 ஸ்பூன் 
சீரகம் - 1 ஸ்பூன் 
வெங்காயம் - 1 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் 
முந்திரி - 3 ஸ்பூன் 
பாதாம் - 3 ஸ்பூன் 
உலர்ந்த வெந்தய இலைகள் - 1 ஸ்பூன் 
க்ரீம் - ½ கப் 
உப்பு - தேவையான அளவு 
சர்க்கரை - 1 ஸ்பூன் 
 
மசாலா பொருள்கள்:
 
மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 
மல்லித் தூள் - 1 ஸ்பூன் 
சீரகப் பொடி - 2 ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் 
கரம் மசாலா - 1 ஸ்பூன் 

செய்முறை: 
 
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் 200 கிராம் பன்னீரை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் வறுத்த பன்னீரை 15 நிமிடம் வெந்நீரில் ஊறவைக்கவும். 15 நிமிடம் கழித்து, தண்ணீரை பிழிந்து தனி பாத்திரத்தில் பன்னீரை மாற்றவும். 
 
முந்திரி மற்றும் பாதாமை நீரில் 15 நிமிடம் ஊறவைத்து மிக்சியில் பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ளவும். பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில்  சீரகம், வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது போன்றவற்றை சேர்த்து பச்சை வாசனை விலகும் வரை நன்றாக வதக்கி கொள்ளவும். 
 
நன்கு வதங்கிய பிறகு எல்லா விதமான மசாலா பொருள்கள், அரைத்த முந்திரி, பாதாம் பேஸ்ட் ஆகியவை சேர்த்து கிளறி விடவும். அடுத்து அதில் தேவையான நீர் சேர்த்து பன்னீரை போட்டு மிதமான சூட்டில் 15-20 நிமிடம் வேகவைக்கவும்.

கடைசியில் உலர்ந்த வெந்தய கீரை மற்றும் க்ரீமை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான மலாய் பன்னீர் தயார். சப்பாத்தியுடன் மலாய் பன்னீரை சேர்த்து சாப்பிடலாம்.