Daily Horoscope
✕

கடலைப்பருப்பு சட்னி செய்ய...!

Written By Sasikala
Updated: சனி, 23 செப்டம்பர் 2017 (15:01 IST)
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
தேங்காய் துண்டுகள் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 5
தக்காளி - 1
கறிவேப்பிலை - சிறிது
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
 
தாளிக்க:
 
கடுகு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உளுந்தம் பருப்பு - சிறிதளவு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 1 ஸ்பூன்

 
செய்முறை:
 
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப்பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும். அடுத்து தேங்காய், வரமிளகாய், தக்காளி, கறிவேப்பிலையை தனித்தனியாக போட்டு நன்றாக வறுத்து குளிர வைக்கவும்.
 
அனைத்தும் நன்றாக ஆறியதும் அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு போட்டு நன்கு  மென்மையாக அரைத்து கொள்ளவும்.
 
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு,  பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து அரைத்த சட்னியில் ஊற்றி கிளறவும். சுவையான கடலைப்பருப்பு சட்னி தயார்.

எல்லாம் காட்டு

தினமும் ஒரு பப்பாளி!.. உடலுக்கு ஏற்படும் நன்மைகள்!..

டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?!.. பொதுமக்கள் அலார்ட்!..

நள்ளிரவு உணவால் வரும் ஆபத்து!.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments