திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

புது வகையான கோஸ் சட்னி செய்ய வேண்டுமா...?

தேவையான பொருட்கள்:
 
கோஸ் - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
உளுத்தம் பருப்பு - ஒரு கைப்பிடி
பூண்டு - 4 பல்
வறுத்து பொடித்த வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
பெருங்காயத் தூள் - சிறிதளவு
கடுகு - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
வெல்லம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

 
செய்முறை:
 
எண்ணெய் விட்டு கோஸை வதக்கி கொள்ள வேண்டும். பிறகு உளுத்தம் பருப்பு, தக்காளி, பூண்டு, காய்ந்த மிளகாய், வெங்காயத்தையும் என்ணெய் விட்டு வதக்கி கொள்ள வேண்டும்.
 
வதக்கிய அனைத்து பொருட்களையும் ஆற வைத்து அரைத்து கடாயில் எண்ணெயை விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் தாளிக்கவும். உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி இறக்கவும். வெந்தயத்தூள், வெல்லத்தை சேர்க்கவும். இவை சுவையும் மணமும் நிறைந்த வித்தியாசமான ஒரு வகை சட்னியாகும்.