பூசணிக்காய் கூட்டு செய்ய வேண்டுமா....!
தேவையான பொருட்கள்:
பூசணிக்காய் - 150 கிராம்
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
அச்சு வெல்லம் - சிறிதலவு
உப்பு - தேவையான அளவு
அரைக்க தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 4 (நறுக்கியது)
தாளிக்க தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
நறுக்கிய வெங்காயம் - 1/4 பங்கு
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
பூசணிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். அரைக்க கொடுத்தவற்றை மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள பூசணிக்காய் துண்டுகளை போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், அச்சு வெல்லம் மற்றும் 50 மில்லி தண்ணீரும் சேர்த்து கொதிக்க விடவும்.
பூசணிக்காய் வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்க்கவும். கொதி வந்து கூட்டு கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். சுவையான பூசனிக்காய் கூட்டு தயார்.