HMPV வைரஸ் சர்க்கரை நோயாளிகளை அதிகம் பாதிக்குமா? அதிர்ச்சி தகவல்
இந்தியா உள்பட பல நாடுகளில் கடந்த சில வாரங்களாக HMPV வைரஸ் பரவி வரும் நிலையில் இது சுவாச அமைப்பை தான் முதலில் பாதிக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. சளி, மூக்கடைப்பு, இருமல், உடல் சோர்வு ஆகியவை இந்த நோயின் அறிகுறி ஆகும் என்று கூறப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஐந்து வயதுக்குட்ப குழந்தைகளை இந்த நோய் பாதிக்கும் என்றும் எனவே பெற்றோர்கள் குழந்தைகளை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த நோய் வர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு சுவாச செயலிழப்பு உள்ளிட்ட பிரச்சனை இருக்கும் என்பதால் இந்த நோய் விரைவில் தாக்க வாய்ப்பு இருப்பதாகவும், எனவே சர்க்கரிஅ நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது
மேலும் இந்த நோய் இருமல், தும்மலில் வெளிப்படும் வைரஸ் கலந்த சுவாச துளிகள் மூலமாகவும் அதிகம் பரவும் என்பதால் இந்த நோய் தாக்கப்பட்டவர்கள் தனிமையில் இருப்பது அவசியம்.
Edited by Mahendran