எலும்பு மண்டலத்தை வலுவாக்க உதவும் பிரண்டை.. முக்கிய தகவல்கள்..!
எலும்பு மண்டலத்தை வலுவாக்கும் சக்தி பிரண்டைக்கு இருப்பதாகவும் இதனை பழங்காலத்தில் மருந்தாக பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
மனித எலும்பு மண்டலத்தை இரும்பு போல் வலுவாக்கும் திறன் கொண்டது பிரண்டை என்றும் இதனை சஞ்சீவினி என்று பெயர் வைத்து அழைக்கிறார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இதில் ஏராளமான சத்துக்கள் கிடைப்பதாகவும் குறிப்பாக வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ் நார் சத்துக்கள் ஆகியவை உள்ளன என்றும் கூறப்படுகிறது.
எலும்பு தொடர்பான பாதிப்புகளை சரி செய்ய பிரண்டைக்கு இணையாக எதுவும் இல்லை என்றும் இயற்கை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எலும்பு முறிவு, எலும்பு மூட்டு நகர்வு, எலும்பு தேய்மானம் உள்ளிட்ட பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ச்சியாக பிரண்டையை சாப்பிட்டு வந்தால் குணமாகி விடுவார்கள் என்றும் அதேபோல் பாக்டீரியா மற்றும் கிருமி தொல்லை பாதிப்பிலிருந்து பிரண்டை பாதுகாக்கும் என்றும் கூறப்படுகிறது.
பிரண்டை துவையல் செய்து சாப்பிடுவதால் வாயு பிரச்சனை, தீராத வலி போன்றவற்றுக்கு நிவாரணம் கிடைக்கும் என்றும் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதோடு, இதை சாப்பிட்டால் ஞாபக சக்தியும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
Edited by Mahendran