செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

மாங்காய் இஞ்சி நெல்லிக்காய் துவையல் செய்ய...

மாங்காய் இஞ்சி நெல்லிக்காய் துவையல் செய்ய...
 
தேவையானவை:
 
பெரிய நெல்லிக்காய் - 4
மாங்காய் இஞ்சி - 50 கிராம்
கொத்துமல்லித் தழை - கைப்பிடி
பச்சை மிளகாய் - 2
புளி - சிறு அளவு
துருவிய தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்

 
செய்முறை: 
 
மாங்காய் இஞ்சியைத் தோல் நீக்கி, துண்டுகளாக நறுக்கவும். நெல்லிக்காயையும் கொட்டை நீக்கி, நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் இஞ்சி, நெல்லிக்காயுடன் வதக்கி கொள்ளவும். மற்ற பொருட்களையும் போட்டு ஐந்து  நிமிடம் வதக்கி, ஆறவைத்து, தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுக்கவும். தேவைப்பட்டால் சிறுது தண்ணீர் சேர்த்தும் அரைத்து  கொள்ளலாம்.
 
சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், பிரெட், தோசையின் மேலே தடவி சாப்பிட சுவையாக இருக்கும். இந்தத் துவையலை சாதத்தில் கலந்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, ஒரு துளி நெய்விட்டுக் கலந்தால், சுவையான மாங்காய் இஞ்சி  நெல்லிக்காய் சாதம் தயார்.