Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆனியன் சமோசா செய்ய....!

Updated: வெள்ளி, 10 மே 2019 (13:17 IST)
மைதா - 1 கப்
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 4
அவல் - 1 கப்
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லி - தேவையான அளவு
எலுமிச்சை - 1
செய்முறை:
 
மைதா, கோதுமை, உப்பு, எண்ணெய் சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். 15 நிமிடம் ஊறவிடவும்.
 
ஒரு பாத்திரத்தில் வெங்காயம், அவல், மிளகாய் தூள், சீரகப் பொடி, நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து  கலந்து கொள்ளவும்.
சமோசா மாவை சப்பாத்தி போல் மெல்லியதாக திரட்டி கொள்ளவும். தோசை கல்லில் போட்டு ஒரு பக்கம் மட்டும் சூடுபத்தினால்  போதுமானது. மைதாவில் சிறிது தண்ணீர்விட்டு பசைபோல் செய்து கொள்ளவும்.
 
சூடுபடுத்திய சப்பாத்தியை நீளவாக்கில் கட் செய்து பசையை தடவி முக்கோணமாக மடித்து கொண்டு, செய்து வைத்திருந்த வெங்காய கலவையை நிரப்பி பசையை தடவி மூடிவிடவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தயாராக வைத்துள்ள சமோசாவை பொறித்து   எடுக்கவும். சுவையான ஆனியன் சமோசா தயார்.

எல்லாம் காட்டு

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments