Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவை மிகுந்த மிளகு வடை செய்ய !!

Written By Sasikala
Updated: வெள்ளி, 20 மே 2022 (14:37 IST)
தேவையான பொருட்கள்:

உளுந்தம் பருப்பு - 1 கப்
மிளகு - 1 டீஸ்பூன்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு



செய்முறை:

உளுந்தம் பருப்பை 30 நிமிடங்கள் ஊறவைத்து, கழுவி, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு, ஒரு வடிகட்டியில் போட்டு வைக்கவும். மிளகை கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் உளுந்தம் பருப்பை போட்டு, தண்ணீர் எதுவும் சேர்க்காமல், கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் அரிசி மாவு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு சுத்தமான ஈரத்துணியில், ஒரு சிறு எலுமிச்சம் பழ அளவிற்கு மாவை எடுத்து வைத்து, மெல்லிய வடையாகத் தட்டவும்.

பின்னர் வடையை துணியிலிருந்து கவனமாக எடுத்து, காய்ந்த எண்ணெயில் போட்டு, நன்றாக சிவக்கும் வரை பொரித்தெடுக்கவும். சுவை மிகுந்த மிளகு வடை தயார்.

எல்லாம் காட்டு

உடல் நலம் சரியில்லாதபோது என்ன சாப்பிட வேண்டும்?!.. வாங்க பார்ப்போம்!..

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments