அருமையான சுவையில் பட்டாணி புலாவ் செய்ய !!

Written By Sasikala
Updated: செவ்வாய், 14 ஜூன் 2022 (15:19 IST)
தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - ஒரு கப்
பச்சைப் பட்டாணி - 1/2 கப்
கேரட்  - 1
பச்சைமிளகாய் - 4
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு - 6 பல்
பெரிய வெங்காயம் - 2
பட்டை, கிராம்பு தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் , நெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு  - தேவையான அளவு



செய்முறை:

இஞ்சி, பூண்டை அரைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம், பச்சைமிளகாயை நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கவும்.

கேரட்டை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அரிசியைக் கழுவி வைத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்புத்தூள் போட்டு வெடித்த பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிவக்க விடவும். அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், பச்சைப்பட்டாணி சேர்த்து வதக்கவும்.

இத்துடன் அரிசி சேர்த்துக் கிளறி, அரிசி சற்று வறுபட்டதும் குக்கருக்கு மாற்றி 2 கப் தண்ணீர் (அரிசி ஒரு கப் எனில் தண்ணீர் 2 கப்) ஊற்றி மூடி இரண்டு விசில் வந்ததும் அடுப்பை நிறுத்திவிட வேண்டும். சுவையான பட்டாணி புலாவ் தயார். இதனை தக்காளி குருமா மற்றும் வெங்காய தயிர் பச்சடியுடன் சாப்பிடலாம்.

எல்லாம் காட்டு

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments