Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரோக்கியம் தரும் ஸ்டப்டு பாகற்காய் செய்ய...!!

Written By Sasikala
Updated: செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (18:31 IST)
பெரிய வெங்காயம் - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
பூண்டு - 6 பல்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
புளி - சிறிய துண்டு
கடலைமாவு - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 4 குழிக்கரண்டி
தனியாத்தூள் – தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
 
பாகற்காயை நடுவில் வகுந்து விதைகளை அகற்றி விடுங்கள். உள்பகுதியில் லேசாக உப்பு தடவி அரைமணி நேரம் கழித்து நன்றாக கழுவி  சுத்தம் செய்யுங்கள். கசப்பு நீங்கிவிடும். 
 
வெங்காயத்தை சிறிதாக வெட்டிக் கொள்ளுங்கள். வாணலியை அடுப்பில் வைத்து 1 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, சீரகம்,  கறிவேப்பிலை, பூண்டு போட்டு தாளித்து வெங்காயம், மஞ்சள்தூள், உப்பு போட்டு வதக்குங்கள். வெங்காயம் பொன்னிறமானதும், புளியை  தண்ணீரில் கரைத்து ஊற்றுங்கள். பின் கடலைமாவு, மிளகாய்த்தூளைப் போட்டு நன்றாக கிளறி, கொத்தமல்லித் தழையை போட்டு இறக்கி  ஆறவைத்துக் கொள்ளுங்கள். 
 
இந்த கலவையை பாகற்காயின் உள்ளே வைத்து நூலால் தனித்தனியாக கட்டி விடுங்கள். வாணலியை மிதமான தீயில் வைத்து மீதமுள்ள  எண்ணெயை ஊற்றி அதில் பாகற்காயை போட்டு வேகவையுங்கள். 15 நிமிடங்கள் வேக வேண்டும். 3 நிமிடத்துக்கு ஒருமுறை பாகற்காய்களை  திருப்பி விடவேண்டும். பச்சைநிறம் மங்கி வெந்ததும் இறக்குங்கள். அவ்வளவுதான் ஸ்டப்டு பாகற்காய் தயார்.

எல்லாம் காட்டு

உடல் நலம் சரியில்லாதபோது என்ன சாப்பிட வேண்டும்?!.. வாங்க பார்ப்போம்!..

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments