Daily Horoscope
✕

சுவை மிகுந்த வாழைப்பழ கோதுமை தோசை செய்ய !!

Written By Sasikala
Updated: செவ்வாய், 17 மே 2022 (17:15 IST)
தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் - 1
கோதுமை மாவு - 1/2 கப்
அரிசி மாவு - 1 ஸ்பூன்
ரவை - 1/4 கப்
வெல்லம் அல்லது கருப்பட்டி - 1/3 கப்
ஏலக்காய் தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு



செய்முறை:

ஒரு பாத்திரத்தில் வாழைப் பழத்தை துண்டுகளாக்கி கையாலோ அல்லது மத்தாலோ நன்கு மசித்து விடவும். அடுப்பில் மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தை நசுக்கி போட்டு 1/2 கப் தண்ணீர் ஊற்றி சூடு பண்ணவும்.

வெல்லம் கரைந்தவுடன் அடுப்பை அணைத்து ஆறியவுடன் வடிகட்டி வாழைப்பழத்துடன் சேர்க்கவும். மற்ற பொருட்களான கோதுமை மாவு, ஏலக்காய் தூள், அரிசி மாவு, ரவை, சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து அரை மணி நேரத்திற்கு ஊறவிடவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் எண்ணெய் தடவி மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும். சுவை மிகுந்த வாழைப்பழம் கோதுமை தோசை தயார்.

எல்லாம் காட்டு

நள்ளிரவு உணவால் வரும் ஆபத்து!.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments