சுரைக்காய் கூட்டு செய்ய...!!

Written By Sasikala
Updated: வெள்ளி, 3 ஜனவரி 2020 (12:07 IST)
பொரிக்கடலை - 10 கிராம்
உப்பு - தேவையான அளவு
 
தாளிக்க தேவையான பொருட்கள்:
 
நல்ல எண்ணெய் - 2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 2 எண்ணம்
க‌றிவேப்பிலை - 2 கீற்று
கடுகு - அரை ஸ்பூன்
செய்முறை: 
 
முதலில் சுரைக்காயின் தோலினை சீவிக் கொள்ளவும். பின் குறுக்குவாக்கில் வெட்டி நடுவில் உள்ள சதைப்பகுதியினுள் உள்ள விதைகளை நீக்கி கொள்ளவும். பின் சுரைக்காயின் மென்மையான மற்றும் கடினமான சதைப்பகுதிகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
 
பொரிகடலையை மிக்ஸியில் போட்டு மென்மையாக பொடித்துக் கொள்ளவும். பொடியாக்கப் பட்ட பொரிகடலை சின்ன வெங்காயத்தை தோல்  நீக்கி சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
 
குக்கரில் நறுக்கிய சுரைக்காய் துண்டுகளைச் போடவும். வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் சதுரங்களாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, கடுகு சேர்த்து தாளித்து, குக்கரில் உள்ள சுரைக்காய் துண்டுகளுடன் தாளித்தக் கலவையைச்  சேர்க்கவும். பின் குக்கரில் தனியாப் பொடி, சீரகப் பொடி, வத்தல் பொடி, மஞ்சள் பொடி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
 
சுரைக்காய் கலவையுடன் மசாலாப் பொருட்களைச் சேர்த்ததும், குக்கரில் 3 குழிக்கரண்டி தண்ணீர் சேர்க்கவும். பின் சுரைக்காய் கலவையை நன்கு கிளறி குக்கரை மூடி விடவும். குக்கரில் விசில் வந்ததும் அடுப்பின் தணலை சிம்மில் வைக்கவும். இரண்டு நிமிடங்கள் கழித்து குக்கரை  அணைத்து விடவும். குக்கரின் ஆவி அடங்கியதும் குக்கரை திறக்கவும்.
 
குக்கரை திறந்த பின்பு, பொடித்துள்ள பொரிகடலையை சுரைக்காய் கலவையுடன் சேர்த்து ஒரு சேரக் கிளறவும். சுவையான சுரைக்காய் கூட்டு  தயார்.

எல்லாம் காட்டு

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

அடுத்த கட்டுரையில்
Show comments