புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By

அனைவருக்கும் பிடித்த சுவையான மெதுவடை செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள்:
 
உளுந்தம் பருப்பு - 1 கப்
பச்சைமிளகாய் - 2
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
வெங்காயம் - 1 (பொடி)
இஞ்சி - சிறுசிறு துண்டுகள்
சீரகம் - 1 ஸ்பூன்
சோடா உப்பு - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
 
உளுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடியவிட்டு எடுத்து பின்பு கொஞ்சம் நீர் தெளித்து அத்துடன் பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து மிக்ஸ்சி அல்லது கிரைண்டரில் கெட்டியாக மைய அரைத்தெடுக்கவும்.
 
அரைத்த மாவில் அரிந்த வெங்காயம், சீரகம், கருவேப்பிலை, கொத்தமல்லி இலை, உப்பு மற்றும் சோடா உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவுக்கலவையை சிறு உருண்டைகளாக எடுத்து உள்ளங்கையிலோ அல்லது வாழை இலை மீதோ  வைத்து நடுவில் விரலால் ஓட்டையிட்டு எண்ணையில் போட்டு பொரித்தெடுக்கவும்.
 
மாவு எண்ணெய்யில் விடும்போது கையில் ஒட்டாமல் இருக்க இடையிடையே தண்ணீர் தொட்டு கொள்ளவும். சிறிது நேரம் வெந்து பொன்னிறமாக மாறியதும் எடுத்து எண்ணெய்யை நன்கு வடியவிட்டு எடுக்கவும். சூடான சுவையான மெதுவடை தயார்.