Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவை மிகுந்த புளியோதரை செய்ய...!

Updated: திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (14:59 IST)
நல்லெண்ணெய் - 50 கிராம்
மிளகு - 50 கிராம்
புளிக்காய்ச்சல் தயாரிக்க
புளி - 100 கிராம்
நல்லெண்ணெய் - 100 கிராம்
கடலைப் பருப்பு - 50 கிராம்
உளுத்தம் பருப்பு - 50 கிராம்
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 10 கிராம்
கடுகு - 1/2 தேக்கரண்டி 
பெருங்காயம் - சிறிது
முந்திரிப் பருப்பு - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
 
புளியைக் கெட்டியாகக் கரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் நல்லெண்ணையை ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, கடலைப்  பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் என்ற வரிசையில் போட்டு நன்றாகச் சிவக்க வறுக்கவும்.
பின்னர் அதில் முந்திரிப் பருப்பையும், வறுத்துக் கொள்ளவும். அதில் கெட்டியாகக் கரைத்து வைத்துள்ள புளியைச் சேர்த்துக் கொதிக்க  வைக்கவும். இரண்டு நிமிடம் கொதித்தவுடன் உப்பு, மஞ்சள் தூளைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
 
புளிநீர் பாதியாக வற்றும் வரை, கொதிக்கவிட்டு இறக்கி எடுத்து வைக்கவும். இதனை பச்சரிசியை உதிர் உதிராகச் சமைத்து, அதில் இரண்டு  டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து ஆறவிட வேண்டும். சாதம் ஆறியதும், கொஞ்சம் கொஞ்சமாகப் புளிக்காய்ச்சலைக் கலக்க வேண்டும். 
 
பின்னர் தேவையான அளவு பொடி செய்யப்பட்ட மிளகை, 50 கிராம் நல்லெண்ணையோடு கலந்து, அதையும் சாதக் கலவையில் சேர்த்துக் கலக்க வேண்டும். சுவையான புளியோதரை தயார்.

எல்லாம் காட்டு

உடல் உறுப்பை பாதிக்கும் 7 கெட்ட பழக்கங்கள்!.. உடனே நிறுத்துங்க!...

உடல் எடை குறையாமல் இருக்க காரணம் என்ன?.. வாங்க பார்ப்போம்!..

மீண்டும் சூடுபடுத்தக் கூடாத உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..

சாப்பிட்டா நோயே வராது!.. சிறு தானியங்களின் பெரு நன்மைகள்!..

உணவு சாப்பிட்டவுடன் என்னவெல்லாம் செய்யக்கூடாது!.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments