Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேங்காய் பால் சாதம் செய்ய...!!

Updated: வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (15:20 IST)
பெரிய வெங்காயம் - 3
வெள்ளை பூண்டு - 20 பல் 
பச்சை மிளகாய் - 7
புதினா - 1 கட்டு 
கொத்தமல்லி - சிறிதளவு 
நெய் - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப 
தேங்காய் பால்  - 3 கப்
 
தாளிக்க தேவையான பொருட்கள்: 
 
பட்டை, லவங்கம் - தேவையான அளவு 
கிராம்பு, ஏலக்காய் - தேவையான அளவு
அன்னாசி பூ, கல் பாசி - தேவையான அளவு
செய்முறை: 
 
ஒரு குக்கரில் தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் தேவையான அளவு ஊற்றி, தாளிப்பு பொருட்களை போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கவும்.
10 நிமிடம் ஊற வைத்த அரிசியை நீர் வடித்த பின், அதனுடன் சேர்த்து வதக்கவும்.. பின் மேலே குறிப்பிட்ட அளவு தேங்காய் பாலை ஊற்றி  கிளறவும். குக்கரை மூடி 2 விசில் வரும் வரை காத்திருக்கவும். சூடான சுவையான தேங்காய் பால் சாதம் தயார்.
 
குறிப்பு: இந்த சாதாம் செய்ய தேவைப்பட்டால் உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணியும் சேர்த்து சமைக்கலாம். இதற்கு துணை உணவாக சிக்கன்  கிரேவி இருக்கும்.

எல்லாம் காட்டு

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

உடல் உறுப்பை பாதிக்கும் 7 கெட்ட பழக்கங்கள்!.. உடனே நிறுத்துங்க!...

உடல் எடை குறையாமல் இருக்க காரணம் என்ன?.. வாங்க பார்ப்போம்!..

மீண்டும் சூடுபடுத்தக் கூடாத உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..

அடுத்த கட்டுரையில்
Show comments