புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (09:53 IST)

உடலுக்கு ஆரோக்கியம் தரும் பிரண்டை துவையல் செய்ய !!

Pirandai Thuvaiyal
தேவையான பொருட்கள்:

பிரண்டை - 1 கட்டு
உளுத்தம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 10 பல்
இஞ்சி - 1 துண்டு
காய்ந்த மிளகாய் - 5 முதல் 6
தேங்காய் - 1 துண்டு
புளி - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
பெருங்கயத்தூள் - கால் டேபிள் ஸ்பூன்


செய்முறை:

முதலில் பிரண்டையில் உள்ள மேல் தோலை நீக்கி விட்டு நன்கு சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

எண்ணெய் சூடானதும் 2 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்க்கவும். பின் பூண்டு, இஞ்சி இரண்டையும் சேர்க்கவும். சிறிதளவு புளி சேர்த்துக் கொள்ளவும்.  கால் டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளவும். தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள பிரண்டையை சேர்க்கவும். பிரண்டை வதங்கும் வரை நன்கு வதக்கி கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பின் ஆற வைக்கவும்.

சூடு ஆறிய பின் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். சுவையான சத்தான பிரண்டை துவையல் தயார்.