புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By

வெந்தயக்கீரை சப்பாத்தி செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
கோதுமை மாவு - 11/2 கப்
வெந்தயக் கீரை - 1/2 கப்
தயிர் - 1/4 கப்
தண்ணீர் - சுமார் 1/2 கப்
மிளகாய்த் தூள்  -1  டீஸ்பூன்
தனியாத் தூள் -1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
சீரகம், ஓமம்  - 1டீஸ்பூன் (வறுத்து பொடித்தது)
ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்
செய்முறை:
 
கீரை, பொடிவகைகள், உப்பு இவற்றை பாத்திரத்தில் கலந்துகொள்ளவும். அதனுடன் தயிர் சேர்த்து கலக்கவும். கோதுமை மாவையும் சேர்க்கவும். சிறிது சிறிதாக நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்துகு  பிசைந்துகொள்ளவும். பின்னர் 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் விட்டு மேலும் 5 நிமிடங்கள் பிசைந்து, அரை மணிநேரம் மூடி வைக்கவும்.
 
சப்பாத்தி மாவை சிறிய உருண்டைகளாகப் பிரித்து, சப்பாத்திகளாகத் தேய்த்து சுட்டு எடுக்கவும். காரசாரமான இந்த வெந்தயக்கீரை சப்பாத்திக்கு ரைத்தா, ஊறுகாய், வெண்ணெய்,  தேன் இவை  பொருத்தமான சைட் டிஷ் ஆக இருக்கும்.