Daily Horoscope
✕

சரியில்லாத வாஸ்து முறைகளை சில பரிகாரங்களின் மூலம் சரிசெய்ய முடியுமா...?

Written By Sasikala
Updated: வெள்ளி, 4 ஜூன் 2021 (18:56 IST)
 

வீட்டின் நடுவே படிக்கட்டுகள் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அது முக்கிய உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே வீட்டின் ஓரமாக படிக்கட்டை  அமைக்கலாம்.
 
வீட்டின் மத்திய பகுதி காலியாக இருக்க வேண்டும் அல்லது எந்த ஒரு கனமான மரச்சாமான்களை வைத்திருக்கக் கூடாது. தலைக்கு மேல் உள்ள உத்தரங்கள்  வீட்டின் மைய பகுதி வழியாக செல்ல கூடாது. ஏனெனில் அவை குழப்பமான மனநிலையை ஏற்படுத்தும்.
 
வீட்டின் தென் கிழக்கு பகுதியில் பூமிக்கு அடியில் தண்ணீர் தொட்டி இருக்கக் கூடாது. ஏனெனில் அது உடல்நல பிரச்சனைகள் அதிகம் ஏற்படுத்தும். வீட்டின் அக்னி  மூலையில், அதாவது வீட்டின் தென் கிழக்கு மூலையில் தினமும் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது மிகவும் நல்லது.
 
வீட்டை சுற்றியுள்ள சுவரும் அதன் கதவும் ஒரே உயரத்தில் இருக்க வேண்டும். கதவின் இரு பக்கங்களிலும் சிட்ரஸ் பழங்கள் அல்லது செடிகளை வளர்க்கலாம்.
 
உங்கள் வீட்டில் யாரேனுக்கும் உடல்நலம் சரியில்லை என்றால், அவரின் அறையில் சில வாரங்களுக்கு மெழுகுவர்த்தியை எரிய வைப்பது நல்ல ஆரோக்கியத்தை  கொடுக்கும்.
 
வீட்டின் தென் திசையை நோக்கி ஆஞ்சநேயர் படத்தை வைத்திருப்பது, வீட்டில் உள்ளவர்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் வீட்டின் செல்வ நிலை அதிகரிக்கும்.

எல்லாம் காட்டு

புரட்டாசி பிரதோஷம், மகாளய அமாவாசை: சதுரகிரி கோயிலுக்கு நாளை முதல் பக்தர்கள் செல்ல அனுமதி!

சத்குருவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.O..

புதிய சாதனையை படைத்த பத்ரிநாத்!.. 17.79 லட்சம் பக்தர்கள் வருகை!...

கேது தோஷம் நீங்க விநாயகர் சதுர்த்தியில் செய்ய வேண்டிய வழிபாடு!

நாளை கிருஷ்ண ஜயந்தி.. தொட்டு வரும் வழக்கங்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments