வீட்டில் ஒட்டடை சேர்வதால் வாஸ்து பிரச்சனை ஏற்படுமா...?
Updated: செவ்வாய், 22 ஜனவரி 2019 (12:27 IST)
அதிக அளவில் தூசியும் ஒட்டடையும் சேர்ந்த வீடுகளில் வசிப்பவர்கள், திறமை இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். முன்னேற்றம் குறைந்து காணப்படுகிறது. சிலரின் வீடுகளில் ஒட்டடைதான் மேற்கூறையை தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறதோ என எண்ணும்படியாக ஒட்டடை அதிகளவில் இருக்கிறது. அப்படி இருப்பது நல்லதல்ல. அதனால், நல்ல வாஸ்து தன்மை உள்ள வீட்டுக்கு முக்கியமானது, வீட்டை தூய்மையாக வைத்திருப்பதும், தூசியும், ஒட்டடையும் சேர விடாமல் பார்த்துக்கொள்வதும் ஆகும்.
வீட்டில் தூசி, ஒட்டடை சேரவிடக்கூடாது. அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம். பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக்கூடாது. இரவில் வீட்டைப் பெருக்கி குப்பையை வெளியே கொட்டக்கூடாது. இது போன்ற சில எளிய வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலே போதும்; திருமகள் தேடி வருவாள். அவளது அருளால் உங்கள் வீட்டில் எல்லாச் செல்வமும் சேரும் என்கின்றன புராணங்கள்.