கரூர்: பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா

கரூரில் தை மாத பிரதோஷத்தினை முன்னிட்டு பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்தார்.
 
கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் தை மாத பிரதோஷ நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை முன்னிட்டு இரவு பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு அம்பாளுடன் காட்சியளித்தார். மேலும், அலங்கரிக்கப்பட்ட பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்ததோடு, மகா தீபாராதனையும் காட்டப்பட்டது.
 
பின்னர் கோயிலின் உட்பிரகாரத்தில் சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் உலா வந்தார். இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து  கொண்டு பிரதோஷ நாயனாரை வெள்ளி ரிஷப வாகனத்தில் தரிசித்து அருள் பெற்றனர். இதற்கான முழு ஏற்பாடுகளை கோயில்  நிர்வாகத்தினர், இந்து சமய அறநிலையத்துறையினரும், சிவனடியார்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

 


இதில் மேலும் படிக்கவும் :