படிப்பதற்கு கைக்கொடுக்கும் திசைகளும் பலன்களும் !!

Vastu
Sasikala|
தென் கிழக்கு திசையை அக்னி திசை என்று அழைக்கப்படுகிறது. இந்த திசைக்கு உரிய மூர்த்திகள் ஸ்ரீஸ்வாஹா தேவி, சமேத அக்னி மூர்த்தி ஆகியோர்  ஆவார். 

பொதுவாகவே தென் கிழக்கு திசையில் படுக்கையறை அமைப்பது நல்லது. அப்படி இல்லையென்றால் தென் கிழக்கு திசையில் படுக்கைகளை அமைத்து தூங்குவது  நல்லது.
 
பல உயிர்களை காக்கும் மருத்துவர்கள் பயன்படுத்தும் ஸ்டெதாஸ்கோப் போன்ற உபகரணங்களை மேஜையின் நடுவில் வைப்பது நல்லது.ஆனால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்தும் கத்தி போன்ற உபகரணங்களை தென் கிழக்கு திசையில் வைப்பது நல்லது.
 
கடினமான பாடங்களைப் பயிலுவோர் தென்கிழக்கு திசையில் அமர்ந்து படித்தால் எளிதில் கிரகிக்க முடியும். விஷயங்களைக் கிரகிக்க தென் மேற்கு திசையான நிருத்தி திசையும் வாய்ப்பாடு, சூத்திரங்கள் போன்றவற்றை மனப்பாடம் செய்ய தென் கிழக்கு திசையும் மாணவர்களுக்கு உதவும் திசைகளாகும்.
 
தென் கிழக்கு திசையில் அமர்ந்து கொண்டு ருத்ரம், சமகம், அக்னி மந்திரங்கள், மேதா சூக்தம், சரஸ்வதி துதிகள், ஹயக்ரீவர் தோத்திரம் போன்றவற்றை ஒதினால், இதனால் கிடைக்கும் பலன்கள் பத்து மடங்கு அதிகமாக கிடைக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :