1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Sasikala

சில பயன்தரும் வாஸ்து முறைகள் பற்றி தெரிந்துக்கொள்வோம்...!!

பூஜை அறையை வடகிழக்கு திசையில் அமைத்திடுங்கள்; அனைத்து நன்மைகளும் வந்து சேரும். மேலும் வணங்கும்போது கிழக்கு திசையை நோக்கி வணங்க  வேண்டும்.

வீட்டின் மையப் பகுதி வீட்டின் மூக்கைப் போன்றது. இங்கே தான் நம் வீடு மூச்சு விடுகிறது. அது திறந்த வெளியாகவும், குப்பையாகவும் இருக்கக் கூடாது. இங்கே சுவரிருந்தால் வயிற்று பிரச்சனை மற்றும் பணப்பிரச்சனை வரக்கூடும். அதனால் ஒரு ஜீரோ வாட்ஸ் நீல பல்பை 24 மணி நேரமும் எரிய விடுவது நல்லது.
 
வீட்டில் எந்த திசையிலாவது வெட்டு அல்லது வளைவுகள் இருந்தால், அது வீட்டை பாதிக்கும். முக்கியமாக தென்மேற்கு, வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு திசைகளில் இருந்தால், பெரிய பிரச்சனைகள் ஏற்படும். இதன் பின்னணியில் பல ரகசியங்கள் அடங்கியிருக்கிறது.
 
மிகவும் அடர்த்தியான வண்ணங்களை கொண்டு சுவற்றில் வர்ணங்களை பூசகூடாது. முக்கியமாக சிவப்பு மற்றும் செந்நீலம் நிறங்கள். இது நோயை உண்டாகும் சக்தியை தூண்டும்.
 
தண்ணீர் அல்லது நீரூற்றின் படங்களை படுக்கையறையில் மாட்டக்கூடாது. இது உங்களை வெகுவாக பாதிப்புக்குள்ளாக்கும்.
 
பூஜை பொருட்களை அல்லது கடவுள் படங்களை ஏதாவது உத்திரம் அல்லது நிலை அடுக்கின் கீழ் வைக்க கூடாது. அப்படி வைத்தால் அது மன அழுத்தத்தை  தரும்.
 
வடகிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் கனமான பொருட்களான பீரோவை வைக்கக் கூடாது. அது நம் பண விரயத்துக்கு தடை போதும்.
 
வீட்டு தரையை வாரம் இரண்டு முறை, உப்புள்ள கடல் தண்ணீரால் துடைத்தால், வீட்டில் இருக்கும் எதிர்மறையான சக்திகள் ஓடியே போகும்.