1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Sasikala

ஒருவரின் வீட்டின் அமைப்பை பொறுத்து பணம் விரையம் ஆகுமா...?

அன்றாட வாழ்வில் மிக முக்கிய பங்கினை வகிப்பது பணம். பணம் சம்பாதிக்க ஓரிரு வழிகள் இருந்தாலும் அந்த பணத்தை செலவிட பல வழிகள் ஏற்படுகிறது. 

இதில் ஒரு சிலருக்கு தன்னுடைய வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை மருத்துவத்திற்கும், இன்னும் சிலர் வட்டி, கடன், மாத தவணை கட்டுவதற்கும்,  இன்னும் சிலபேர் காரணங்கள் இன்றி செலவிடக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. 
 
தென்கிழக்கு பகுதி: ஒருவரின் வீட்டின் அமைப்பில் தென்கிழக்கு பகுதியில் தவறான அமைப்புகள் வருமானால் ஏற்படக் கூடிய செலவுகள் நோய்க்காகவும்,  மருத்துவத்திற்காகவும், ஆன்மிகத்திற்காகவும், போலீஸ் கேஸ், கோர்ட் கேஸ்க்காகவும், கல்விக்காகவும் அதிகப்படியாக செலவிடக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது.
 
வடகிழக்கு பகுதி: ஒருவரின் வீட்டின் அமைப்பில் வடகிழக்கு பகுதியில் தவறான அமைப்புகள் வருமானால் திடீர் செலவுகள், காரணமில்லாத செலவுகள், ஒரு வேலையை எளிதாக முடிக்காமல் பலமுறை போராடி முடிக்கும்போது ஏற்படும் வீண் செலவுகள், கண்ணுக்குத்தெரியாத மறைமுக செலவுகள் போன்றவைகள்.  தவறான இடத்தில் முதலீடு போடுதல் போன்றவைகள், திடீர் மார்க்கெட் சரிவு ஏற்பட்டு பணம் இழப்பு ஏற்படுவது போன்றவைகள் ஏற்படக்கூடும்.
 
தென்மேற்கு: ஒருவரின் வீட்டின் அமைப்பில் தென்மேற்கு பகுதியில் தவறான அமைப்புகள் வரும்போது அதிகபடியான கடனுக்கு வட்டிகட்டுதல், மாதத்தவணைகள்,  கிரெடிட் கார்டு தவணைகள், தவணைக்கு தவறிய வட்டி கட்டுதல், கொடுத்த கடன் வசூலிக்க முடியாத நிலை, திடீர் விபத்து ஏற்படுதல் போன்றவைகள் மூலம் அதிக பணச் செலவுகள் ஏற்படக்கூடும்.
 
வடமேற்கு பகுதி: ஒருவரின் வீட்டின் அமைப்பில் வடமேற்கு பகுதியில் தவறான அமைப்புகள் வரும்போது அதிகப்படியாக வாகனங்களுக்கு செலவிடுதல், அதிகப்படியான பிரயாணங்களுக்காக செலவிடுதல், ஆடம்பர வாழ்க்கைக்காக செலவிடுதல் போன்ற அதிக செலவுகள் செய்ய நேரிடும்.