Daily Horoscope

குடும்ப தலைவிகளுக்கான சில பயனுள்ள சூப்பர் டிப்ஸ் !!

Written By Sasikala
Updated: சனி, 30 அக்டோபர் 2021 (15:13 IST)

உருளைக் கிழங்கு வறுவல் செய்யும்போது, கிழங்கின் மீது சிறிது பயத்த மாவைத் தூவி, பின் பொறித்தெடுக்கவும். வறுவல் மொறுமொறுப்பாக இருக்கும்.
 
அவல் பொரியை அப்படியே பாகில் போடுவதற்குப் பதில், பொரியை வெறும் கடாயில் வறுத்து, பிறகு பாகில் போட்டு பொரி உருண்டை பிடிக்கலாம். பொரி உருண்டை மொறுமொறுப்பாக இருக்கும்.
 
மிளகாய்-பஜ்ஜி செய்யும்போது, மிளகாயை நீளவாக்கில் கீறவும். அதனுள் சிறிது உப்பு, இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு விடவும். பிறகு எண்ணெயில் போட்டு பஜ்ஜி செய்யவும். டேஸ்டாக இருப்பதோடு, காரமும் இருக்காது.
 
பருப்பு வடைக்கு அரைக்கும்போது, ஊற வைத்த பருப்பு மற்றும் பொருட்களுடன் ஒரு டேபிள் ஸ்பூன் புழுங்கலரிசி சேர்த்து அரைக்கவும். மாவில் சிறிது நெய் சேர்த்து வடை தட்டவும். வடை கரகரப்பாக நல்ல சுவையுடன் இருக்கும்.
 
சமோசாவை பொறிப்பதற்கு முன்பு, ஒரு சிட்டிகை சோடா உப்பை எண்ணெய் காய்ந்ததும் போட்டு, பொரிய விடவும். பிறகு சமோசாவைப் பொறித்தெடுக்கவும். மொறுமொறுப்பு மாறாமல் இருக்கும்.
 
காப்பர் பாட்டம் உள்ள பாத்திரத்தில் ஐஸ்கிரீம் கலவையை ஊற்றி வைத்தால், ஐஸ்கிரீம் சீக்கிரம் கெட்டியாகிவிடும்.
 
தயிர் வடை அல்லது சாம்பார் வடை செய்ய உளுந்து ஊறப்போடும்போது, உளுந்தின் கால் பங்கு அளவுக்கு மசூர்தால் சேர்த்துப் போடுங்கள். வடை மிகவும் மெதுவாக இருக்கும்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments