புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: ஞாயிறு, 25 நவம்பர் 2018 (22:20 IST)

'விஸ்வாசம்' மோஷன் போஸ்டர் ரிலீஸ்: அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

இன்று மாலை விஜய் நடிக்கவுள்ள 'தளபதி 63' படத்தின் நாயகி நயன்தாரா என்ற செய்தி வெளியாகி சமூக வலைத்தளங்களை ஸ்தம்பிக்க வைத்த நிலையில் அதற்கு போட்டியாக சற்றுமுன் அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அஜித்த்தின் இரண்டு கெட்டப்புகளுடன் "தூக்குத்துரைன்னா அடாவடி, தூக்குத்துரைன்னா அலப்பரை, தூக்குத்துரைன்னா தடாலடி, தூக்குத்துரைன்னா கட்டுக்கடங்காத கிராமத்து காட்டு அடி" என்ற வசனங்களுடன் டி.இமானின் அட்டகாசமான பின்னணி இசையுடன் கூடிய இந்த மோஷன் போஸ்டர் அஜித் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் 'விஸ்வாசம்' திரைப்படம் பொங்கலுக்கு வருமா? வராதா? என்ற வதந்திகளுக்கும் இந்த மோஷன் போஸ்டர் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.