Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஒரு ரகசிய சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு

Updated: திங்கள், 12 நவம்பர் 2018 (19:30 IST)
சமீபத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் மதுரையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ரகசியமாக சந்தித்ததாக செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து இரு தரப்பினர்களும் விளக்கம் அளித்தும் ஊடகங்களில் இந்த செய்தி பல அதிர்வுகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த சந்திப்பின் பரபரப்பு முடிவதற்குள் தற்போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய்பாஸ்கர், திமுக எம்.எல்.ஏ பெரியண்ணன் அவர்களை புதுக்கோட்டையில் ரகசியமாக சந்தித்து பேசியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

புதுக்கோட்டையில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டபோது அங்கு திடீரென புதுக்கோட்டை எம்.எல்.ஏ பெரியண்ணன் வந்ததாகவும், இருவரும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையில் சிறிது நேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சந்திப்பு குறித்து இருதரப்பினர்களும் கருத்து எதுவும் கூறாததால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

2 தொகுதிகளையும் ஜெயிக்க வைக்கிறது என் பொறுப்பு!. அறிவாலயத்தில் ஆவேசமான உதயநிதி!..

தவெக ஆதரவு கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நிறைவு!.. கூட்டணிக்கு என்ன பேர் வச்சாங்க?...

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. முதல்வர் விஜய் உத்தரவு...

SC ST மாணவர்களின் கல்வி உதவித்தொகையில் முறைகேடு.. திமுக ஆட்சியில் நடந்ததாக சிஏஜி அறிக்கை

டாஸ்மாக் கடையில் பணிபுரிந்த வெளிநபர்.. வழக்குப்பதிவு செய்து ஒருவர் கைது..

அடுத்த கட்டுரையில்
Show comments