வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (06:39 IST)

இன்று கருணாநிதி நினைவேந்தல் கூட்டம்: தேசிய தலைவர்கள் வருகையால் பரபரப்பு

கடந்த ஐம்பது ஆண்டுகளாக திமுக தலைவராகவும், ஐந்து முறை தமிழக முதல்வராகவும் இருந்த கருணாநிதி சமீபத்தில் காலமான நிலையில் அவரது நினைவை போற்றும் வகையில் திமுகவினர் அவ்வப்போது நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இன்று சென்னை ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தேசிய தலைவர்கள் பலர் வருகை தரவுள்ளதால் இன்று காலை முதலே சென்னை பரபரப்பாக உள்ளது.

 தெற்கில் உதிக்கும் சூரியன் என்ற தலைப்பில் நடைபெறவுள்ள இன்றைய கூட்டத்திற்கு திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்குகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.

இந்த நினைவேந்தல் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, பாஜக சார்பில் மத்திய மந்திரி நிதின் கட்காரி, தேசிய செயலாளர் முரளிதரராவ், காங்கிரஸ் கட்சி சார்பில் குலாம்நபி ஆசாத் எம்.பி., தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார், ஆந்திரா மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.சுதாகர்ரெட்டி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் உள்பட பலர் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.