வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: வியாழன், 25 அக்டோபர் 2018 (06:21 IST)

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: இன்று தீர்ப்பு

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது தமிழக அரசியல் சூழல் பரபரப்பில் உள்ளது.

அதிமுக எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் மூன்றாவது நீதிபதியிடம் இந்த வழக்கு சென்றது. மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி சத்யநாராயணன், கடந்த ஜூலை மாதம் முதல் விசாரணையை தொடங்கி இருதரப்பு வாதங்களையும் கேட்டு வந்தார்

மொத்தம் 12 நாட்கள் நடந்த விசாரணை முடிவடைந்து, வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இந்த வழக்கின் தீர்ப்பு வெளிவரவுள்ளதாக செய்திகள் கசிந்தது. இதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் குற்றாலத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் எனன எதிர்பார்க்கப்படும் இந்த வழக்கின் தீர்ப்பை, இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி சத்யநாராயணன் வழங்குவார் என நள்ளிரவு வெளியான சென்னை ஐகோர்ட் அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.