செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 24 அக்டோபர் 2018 (15:34 IST)

தீர்ப்பு எப்படி வந்தாலும் கவலைப்பட மாட்டோம் : தங்க தமிழ்ச்செல்வன்

தமிழகத்தில் 18 சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.இதனையடுத்து தகுதி நீக்கத்தை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்களின் சார்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணையும் முடிந்து ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் தீர்ப்பு கூறிவிட்ட நிலையில் மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணன் தீப்புக்காக மட்டுமே பாக்கியுள்ளது.
ஆளும் அதிமுக மற்றும் அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் ஆதரவு பதினெட்டு எம்.எல் .ஏக்களுடன் ஒட்டு மொத்த தமிழகமும் பெருத்த ஆவலுடன் இவ்வழக்கின் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில் 18 எம்.எல்.ஏக்களும் தினகரன் உத்தரவின் பேரில் குற்றாலத்தில் உள்ள இசக்கி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில்  வழக்கின் தீர்ப்பு வரும் முன் தங்க தமிழ்செல்வன் கூறியதாவது:
நீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்தாலும் சரி, பாதகமாக வந்தாலும் சரி கவலைப்பட எதற்கும் மாட்டோம்.ஆனால் முதல் அமைச்சர் மற்றும் சில அமைச்சர்களை மாற்றி விட்டு ஆட்சியை தொடர்ந்து நடத்துவோம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.