புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: புதன், 14 நவம்பர் 2018 (22:25 IST)

இன்று நடந்தது சிலை திறப்பு விழா இல்லை: அமைச்சர் ஜெயகுமார் விளக்கம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்த விழாவில் முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்

இந்த நிலையில் ஜெயலலிதாவின் சிலை திறப்பு விழா முறைப்படி நடக்கவில்லை என்றும், சிலையை ஒரு ஸ்டாண்ட் போட்டு ஸ்க்ரீன் வைத்து மூடாமல், வெறும் துண்டை போட்டு ஜெயலலிதாவின் சிலையை மூடியிருந்ததாகவும் அதிமுக தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். சிலர் இதனை புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கினர்.

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த அமைச்சர் ஜெயகுமார், 'இது சிலை திறப்பு விழா அல்ல, ஏற்கெனவே 'அம்மாவின்' சிலை முதல்வர், துணை முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுவிட்டது. திறக்கப்பட்ட சிலையில் சில கருத்துகள் பொதுமக்கள் மத்தியிலும், கட்சிக்காரர்கள் மத்தியிலும் எழுந்ததால் அந்த சிலை திருத்தம் செய்யப்பட்டு இன்று புகழ்மாலை சூட்டும் வகையில் புதிய சிலை நிறுவப்பட்டது. எனவே இன்று நடந்தது சிலை திறப்பு விழா நிகழ்ச்சி இல்லை. அது புகழஞ்சலி கூட்டம் மட்டுமே என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்தார்.