செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : செவ்வாய், 22 மே 2018 (20:43 IST)

ரஜினிக்கு ஜோடியாகிறார் சிம்ரன்?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
 
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா திரைப்படம் வரும் ஜூன் 7ஆம் தேதி வெளியாக உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 திரைப்படம் எப்போது வெளியாகும் என்று சரியாக தெரியவில்லை. 
 
இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் ரஜினியுடன் சேர்ந்து விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்து படக்குழு எந்த ஒரு தகவலையும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. ரஜினியும், சிம்ரனும் இதுவரை எந்த படத்திலும் சேர்ந்து நடித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது