ஞாயிறு, 7 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 21 மே 2018 (19:20 IST)

மறைந்த உயிர் நண்பரின் குடும்பத்தினர்களுக்கு ஒரு வாரம் கழித்து ஆறுதல் கூறிய கமல்

மறைந்த உயிர் நண்பரின் குடும்பத்தினர்களுக்கு ஒரு வாரம் கழித்து ஆறுதல் கூறிய கமல்
கடந்த 15ஆம் தேதி பிரபல எழுத்தாளரும், திரைப்பட வசனகர்த்தாவுமான பாலகுமாரன் மரணம் அடைந்தபோது, ஒட்டுமொத்த திரையுலகமே அவருடைய இல்லத்திற்கு சென்று மலரஞ்சலி வைத்து இரங்கல் தெரிவித்தனர். ஆனால் பாலகுமாரனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கமல்ஹாசன், அவர் மரணம் அடைந்த நேரத்தில் தமிழகத்தில் இருந்தும் நேரில் அஞ்சலி செலுத்தவில்லை
 
பாலகுமாரன் மறைந்த தினத்தன்று கமல்ஹாசன் நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மக்களை சந்தித்து கொண்டிருந்தார். இந்த நிலையில் சென்னை திரும்பிய கமல், நேற்று மீண்டும் கேரளா சென்று அம்மாநில முதல்வரை சந்தித்தார். பின்னர் ஏசியாநெட் விருது வழங்கும் விழாவிலும் கலந்து கொண்டார்.
 
மறைந்த உயிர் நண்பரின் குடும்பத்தினர்களுக்கு ஒரு வாரம் கழித்து ஆறுதல் கூறிய கமல்
இந்த நிலையில் பாலகுமாரன் மறைந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் இன்று அவருடைய இல்லத்திற்கு நேரில் சென்ற கமல், அவருடைய குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறினார். கமல்ஹாசனின் குருநாதரானா கே.பாலசந்தர் மறைவின்போதும் கமல் நேரில் அஞ்சலி செலுத்த வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.