Daily Horoscope
✕

நாங்களும் லேட்டா வருவோம், கரெக்டா அடிப்போம்: ரஜினிக்கு அமைச்சர் பதிலடி

Updated: ஞாயிறு, 4 நவம்பர் 2018 (14:18 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று நடைபெற்ற '2.0' திரைப்படத்தின் டிரைலர் விழாவில் பேசியபோது, 'லேட்டா வந்தாலும் கரெக்டா வரணும், வந்தா அடிக்கணும், ஜனங்க நம்பியாச்சு, வந்தா ஹிட்டாகும்ன்னு தெரிஞ்சிடுச்சு, வருவது மட்டும்தான் பாக்கி!, என்று கூறிவிட்டு ரசிகர்களின் கைதட்டல் ஓய்ந்தவுடன், 'நான் படத்தை சொன்னேங்க..என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ரஜினியின் இந்த பேச்சுக்கு பெரும் வரவேற்பு ஏற்பட்ட நிலையில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமண விழா ஒன்றில் பேசிய அமைச்சர்  ராஜேந்திரபாலாஜி, 20 தொகுதி இடைத்தேர்தலில் 'ஒவ்வொரு கட்சியும் நாங்கள்தான் ஜெயிப்போம் என்று கூறுவது வழக்கமே. அது அந்தந்த கட்சியினரின் நிலைப்பாடு. ஆனால் லேட்டா வந்தாலும் கரெக்ட்டா அடிப்போம். 20 தொகுதிகளிலும் ஜெயிப்போம் என்று கூறினார்.

மேலும் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் எப்போது வரும் என்று தெரியாது என்றும், ஆனால் இப்போதே அதிமுக தேர்தலுக்கு தயாராகி வருவதாகவும், தங்களுடைய இலக்கு ஆட்சியை காப்பாற்றும் வெறும் 8 அல்ல என்றும் இருபது தொகுதிகளிலும் வெற்றி பெறுவதுதான் இலக்கு என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

எல்லாம் காட்டு

கனடா செல்கிறார் பிரதமர் மோடி.. புதிய பிரதமர் மார்க் கார்னியுடன் முக்கிய பேச்சுவார்த்தை..

கூலிங் ஃபேன் உடன் ஒன் பிளஸ் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட்போன்.. கேமிங் பிரியர்களுக்கு செம்ம போன்...

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மீண்டும் ஒரு வாய்ப்பு அளித்த தேர்தல் ஆணையம்...

வங்கக்கடல், அரபிக்கடல்.. ஒரே நேரத்தில் 2 புயல்கள்.. தமிழகத்தில் கொட்ட போகுது கனமழை...

கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றுவிடுவார் என்று ஒரு பெண்மணி என்னிடம் சொன்னார்... திருமாவளவன் திடுக் தகவல்...

அடுத்த கட்டுரையில்