Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் ஆலை மின் இணைப்பு துண்டிப்பு: நிரந்தரமாக மூடப்படுமா?

Updated: வியாழன், 24 மே 2018 (09:21 IST)
தூத்துகுடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் ஆலையின் உரிமத்தை புதுப்பிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே மறுத்துவிட்ட நிலையில் தற்போது ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
 
ஸ்டெர்லைட் ஆலையின் சிடிஓ அனுமதியை புதுப்பிக்க ஏற்கெனவே வாரியம் மறுத்த நிலையில் மே18 மற்றும் 19ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்குள் வாரிய அதிகாரிகள் நடத்திய ஆய்வில் ஆலை உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் கண்டறியப்பட்டதால் மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
இந்த நடவடிக்கை காரணமாக ஸ்டெர்லைட் ஆலை இனிமேல் தூத்துகுடியில் இயங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

எல்லாம் காட்டு

எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.. தமிழக முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் பாராட்டு...

சொறிஞ்சிவிட்டா ரூ.14 லட்சம் வருமானம்!.. புதுசா புதுசா யோசிக்கிறாங்க!...

ரூ.1,911.80 கோடி வங்கி இருப்பு.. ரூ.1,811.10 கோடி பிக்சட் டெபாசிட்.. 60,821 ஏக்கர் நிலம்.. பூரி மலைக்க வைக்கும் ஜெகந்நாதர் கோயிலின் சொத்துக்கள்

பைக் டாக்ஸி சேவைக்கு மாநில அரசு அனுமதி வழங்க வேண்டும்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தல்..

3 நாட்கள் தொடர் விடுமுறை!.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments