மே 17ஆம் தேதி நயன்தாராவின் அடுத்த ரிலீஸ்…

வெள்ளி, 11 மே 2018 (11:17 IST)
மே 17ஆம் தேதி நயன்தாராவின் பாடல் ஒன்று வெளியாக இருக்கிறது. 
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கோலமாவு கோகிலா’, சுருக்கமாக ‘கோகோ’. ஹீரோயினை முன்னிலைப்படுத்திய இந்தப்  படத்தில், நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, ஜாக்குலின் ஆகியோர் முக்கிய வேடங்களில்  நடித்துள்ளனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் இருந்து ‘எதுவரையோ…’ என முதல் பாடல் ஏற்கெனவே ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில், மே 17ஆம் தேதி இரண்டாவது லிரிக்கல்  வீடியோவை ரிலீஸ் செய்யப் போவதாக அனிருத் அறிவித்துள்ளார். ‘கல்யாண வயசு’ என்று தொடங்கும் இந்தப் பாடலை எழுதியவர், முதன்முதலாக  இப்போதுதான் பாடல் எழுதுகிறார். அவர் யார் எனத் தெரியுமா? என்று கேட்டுள்ளார் அனிருத்.
 
ஒருவேளை அனிருத்தே எழுதியிருப்பாரோ..?

எல்லாம் காட்டு

12 வயது மாணவி ஆரம்பித்த ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனம்.. 3 நாடுகளில் வாடிக்கையாளர்கள்...

தவெக இருக்கும் கூட்டணியில் திமுக இருக்காது: திருமாவளவன் யோசனை நிராகரிப்பு...!

35 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய 1000 ரூபாய் கடன்.. வட்டியுடன் சேர்த்து நண்பருக்கு கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா?

அவனுக்கு ஒன்னும் தெரியாது!... மீண்டும் விஜயை அட்டாக் பண்ணிய அனிதா ராதார்கிருஷ்ணன்..

வணிக கப்பல் மீது ஈரான் தாக்குதல்.. கப்பலில் இருந்த 11 இந்தியர்களில் 10 பேர் மீட்பு..ஒருவரை காணவில்லை...

அடுத்த கட்டுரையில்
Show comments