Daily Horoscope
✕

ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் பிரதமர் அதிரடி கைது

Updated: செவ்வாய், 3 ஜூலை 2018 (16:15 IST)
ஊழல் வழக்கில் சிக்கிய மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது ஏராளமான ஊழல் புகார்கள் இருந்து வந்தன. ஊழல் வழக்கை விசாரித்து வந்த அதிகாரிகள்  திடீரென நஜீப் ரசாக் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 72 பைகளில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ தங்கம், ரூ.188 கோடி ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 
இதையடுத்து அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியானது. இருப்பினும் நஜீப் ரசாக் தன் மீதான குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்தார்.
 
இந்நிலையில் பணமோசடி தடுப்பு பிரிவினர் இன்று நஜீப் ரசாக்கின் வீடு புகுந்து அவரை அதிரடியாக கைது செய்தனர். இச்சம்பவம் மலேசிய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

டாஸ்மாக் ஊழியர்களுக்க்கு ரூ.50 லட்சம் வரை காப்பீடு திட்டம்.. தமிழக அரசு தரும் தீபாவளி பரிசு...

நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு.. 7 வீடுகளை காணவில்லை.. உயிரிழப்பு நடந்ததா?

நவம்பர் 14 குழந்தைகள் தினத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கேக்.. ரூ.9.27 கோடி ஒதுக்கீடு..

வங்கக்கடலில் புயல் சின்னம்.. சென்னைக்கு கனமழை வாய்ப்ப? பருவமழை தொடங்குகிறதா?

3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் யார் யாருக்கு? கணக்கெடுக்கும் பணிகள் தொடக்கம்..

அடுத்த கட்டுரையில்
Show comments