Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபிகா படுகோனே குடியிருப்பில் தீ விபத்து!

Updated: புதன், 13 ஜூன் 2018 (18:58 IST)
மும்பையில் உள்ள பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
 
மும்பையின் வோர்லி பகுதியில் உள்ள சொகுசு வசதிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு பியூமவுண்ட். இங்கு பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே சொந்தமாக வீடு வாங்கி வசித்து வருகிறார். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 33 மாடிகள் உள்ளன. 
 
இந்த குடியிருப்பின் மேல் பகுதியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தீயணைப்பு வீர்ர்கள் உடனடியாக அங்கு விரைந்து அக்குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்களை வெளியேற்றி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 
குடியிருப்பின் மேல் பகுதியில் தீ பிடித்துள்ளதால் தீயை அணைக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

எல்லாம் காட்டு

நயினார் நாகேந்திரனின் சர்ச்சைக்குரிய பேச்சு.. கம்யூனிஸ்ட் தலைவர் பெ சண்முகம் கண்டனம்..

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர்.. முழு விவரங்கள்...!

முன்னாடியெல்லாம் டிவியில நாடகம் பார்ப்போம்.. இப்ப சட்டசபையை பார்க்கிறோம்.. தவெக எம்.எல்.ஏவிடம் தெரிவித்த பெண்கள்..

எம்.எல்.ஏக்களுக்கு அரசு வாகனம், எரிபொருள் மற்றும் ஓட்டுநர் படி.. தமிழ்நாடு அரசு திட்டம்...

11 வகை மதுபானங்கள் மீது தடை விதித்தது யார்? தடையை அடுத்த நாளே நீக்கியது யார்? ரெண்டுமே மத்திய அரசு...

அடுத்த கட்டுரையில்
Show comments