திருநாவுக்கரசர் பாஜகவிற்கு சென்றால் காங்கிரஸ் கட்சிக்கு நல்லது: ஈவிகேஎஸ் இளங்கோவன்

திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (08:17 IST)
முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர்  ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர்களின் மோதலால் தமிழக காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
நேற்று சமயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், 'தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர். அவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் இருப்பதைவிட பாஜகவுக்கு செல்வதே நல்லது. அங்கு அவருக்கு ஒரு நல்ல எதிர்காலம் உண்டு. இப்போதும் ஒன்றும் கால தாமதம் ஆகிவிடவில்லை. அவர் மீண்டும் வாஜ்பாயின் பாஜகவிற்கு சென்றால் பாஜகவிற்கு நல்லது மட்டுமின்றி தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியும் சிறப்பாக இருக்கும்" என்று கூறினார்.
 
ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்துக்கு இன்று பதிலளித்த திருநாவுக்கரசர், 'ஈவிகேஎஸ் இளங்கோவன் என்னை பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் எந்த கட்சியில் இருக்க வேண்டும் என்று முடிவு எடுக்க தனக்கு தெரியும் என்றும் கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து!. புதுமண ஜோடிக்கு நேர்ந்த சோகம்!...

இப்பதான் சி.எம். ஆயிட்டீங்களே!. கண்டுபிடிச்சி சொல்லுங்க!.. விஜயை லாக் பண்ணும் அமீர்!..

மனசு கஷ்டமா இருக்கு!.. அதிமுக ஒன்னு சேரணும்!.. அதிமுக நிர்வாகி தற்கொலை!..

இப்பதான் ஆர்.பி.ஐ ரூல்ஸ் தெரியுதா?!.. என்னா ஏமாத்துறீங்களா?!.. தங்கம் தென்னரசு ஆவேசம்..

பாஜகவின் வாஷிங்மெஷின் இப்போது தவெகவிடம்!.. வெளுத்து வாங்கிய அமீர்!...

அடுத்த கட்டுரையில்
Show comments