Daily Horoscope
✕

திருநாவுக்கரசர் பாஜகவிற்கு சென்றால் காங்கிரஸ் கட்சிக்கு நல்லது: ஈவிகேஎஸ் இளங்கோவன்

Updated: திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (07:59 IST)
முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர்  ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர்களின் மோதலால் தமிழக காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
நேற்று சமயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், 'தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர். அவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் இருப்பதைவிட பாஜகவுக்கு செல்வதே நல்லது. அங்கு அவருக்கு ஒரு நல்ல எதிர்காலம் உண்டு. இப்போதும் ஒன்றும் கால தாமதம் ஆகிவிடவில்லை. அவர் மீண்டும் வாஜ்பாயின் பாஜகவிற்கு சென்றால் பாஜகவிற்கு நல்லது மட்டுமின்றி தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியும் சிறப்பாக இருக்கும்" என்று கூறினார்.
 
ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்துக்கு இன்று பதிலளித்த திருநாவுக்கரசர், 'ஈவிகேஎஸ் இளங்கோவன் என்னை பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் எந்த கட்சியில் இருக்க வேண்டும் என்று முடிவு எடுக்க தனக்கு தெரியும் என்றும் கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

ஹோர்முஸ் ஜலசந்தியின் தீவில் ரகசிய தாக்குதல் நடத்திய அமெரிக்கா.. ஈரான் கடும் கோபம்..

கரையை கடந்தது முரசு புயல்... இருப்பினும் 11 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை...

இந்தியாவில் அறிமுகமான இன்ஃபினிக்ஸ் புதிய ஸ்மார்ட்போன்.. விலை எவ்வளவு?

வினாத்தாள் கட்டணம் வசூலிக்க கூடாது.. பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கை...

சென்னை To தென்காசி - தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments