Daily Horoscope
✕

அட்லீயின் அடுத்த படம் என்னனு தெரியுமா?

Updated: செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (18:38 IST)
அட்லீயின் அடுத்த படம் பற்றிய தகவலை அவரே தெரிவித்துள்ளார். 



 
 
இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் அட்லீ. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்த ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
 
அடுத்த படமே விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரை வைத்து ‘தெறி’ படத்தை இயக்கியவருக்கு, அதற்கடுத்ததாகவும் விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைக்க, ‘மெர்சல்’ படத்தை இயக்கினார்.
 
அடுத்தும் விஜய்யை வைத்து இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், அடுத்ததாக தெலுங்குப் படத்தை இயக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார் அட்லீ. தெலுங்கின் மிகப்பெரிய ஸ்டார் இந்தப் படத்தில் நடிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அட்லீ இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

24 மணி நேரத்தில் 467 ரவுடிகள் கைது.. 6540 ரவுடிகளுக்கு எச்சரிக்கை.. காவல்துறை அதிரடி...

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் ... பக்தர்களுக்காக 8 அதிரடி சிறப்பு வசதிகள்... அதிரடி அறிவிப்பு..

டாஸ்மாக் ஊழியர்களுக்கும் டிரான்ஸ்பர் மற்றும் கவுன்சிலிங்.. அதிரடி சுற்றறிக்கை...

நகர்ப்புற திட்டமிடலில் தவெக அரசு அதிரடி! மாவட்ட ஆட்ச் தலைவர்களுக்கு புது பவர்!

தீபாவளி முடிஞ்சிருச்சு.. பொங்கல் ரயில் டிக்கெட் ரிசர்வேஷன் எப்போது? முக்கிய தகவல்...!

அடுத்த கட்டுரையில்
Show comments