திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 13 டிசம்பர் 2022 (13:31 IST)

பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஆயிஷாவுக்கு இவ்வளவு சம்பளமா?

விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில்  இருந்து கடைசியாக வெளியேறியவர் தான் சீரியல் நடிகை ஆயிஷா. 
 
ஆயிஷா பொன்மகள் வந்தால் சீரியலில் நடித்து நடிகையாக மக்களுக்கு பரீட்சியமானார். ஆனால், அந்த சீரியலில் இயக்குனர் தன்னிடம் தவறாக நடந்துக்கொண்டதாக கூறி சர்ச்சை கிளப்பி வெளியேறினார். 
 
தொடர்ந்து சீரியல்களில் நடித்து பிக்பாசில் நுழைந்த அவர் இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறினார். 
 
இந்நிலையில் ஆயிஷாவுக்கு நாள் ஒன்றிற்கு ரூ. 28 முதல் ரூ. 30 ஆயிரம் வரை பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டும் அல்லாமல் எல்.இ.டி டிவி உட்பட ஏராளமான பரிசுப் பொருட்களையும் ஆயிஷா தட்டிச் சென்றுள்ளார்.