1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 13 டிசம்பர் 2022 (13:16 IST)

மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாட்டம்... கணவருடன் என்ஜாய் பண்ணும் ரித்திகா!

சீரியல் நடிகை ரித்திகாவின் ஹனிமூன் போட்டோ மற்றும் வீடியோக்கள்!
 
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தவர் ரித்திகா. 
 
ஒல்லியாக ஹோம்லி பியூட்டியாக ரசிகர்களின் மனம் கவர்ந்த ரித்திகா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். 
 
அப்போது பாலா இவரை உண்மையாகவே காதலித்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால் ரித்திகா அவரை காதலிக்கவில்லை. 
 
இதையடுத்து கேரள பெண்ணான அவர் வீட்டில் பார்த்த மாப்பிளைக்கு ஓகே சொல்லி திருமணம் செய்துக்கொண்டார். 
 
இந்நிலையில் தன் கணவருடன் ஹனிமூனுக்கு மாலத்தீவு சென்றிருக்கும் ரித்திகா அவருடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார்.