ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By
Last Modified: சனி, 23 நவம்பர் 2019 (08:51 IST)

வேந்தர் தொலைக்காட்சியில் இருந்து வெளியேறும் ரங்கராஜ் பாண்டே – டிவிட்டரில் உறுதி !

வேந்தர் தொலைகாட்சியுடன் தனது சாணக்யா தொலைக்காட்சி போட்டிருந்த ஒப்பந்தம் இந்த மாதத்தோடு முடிவடைய உள்ளதாக ரங்கராஜ் பாண்டே டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவியில் பிரபலமாக இருந்த ரங்கராஜ் பாண்டே அங்கு ஏற்பட்ட சில குளறுபடிகளால் வெளியேற்றப்பட்டார். அதன் பின் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனாலும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் சாணக்யா என்ற டிஜிட்டல் சேனலை தொடங்கினார்.

மேலும் அந்த சேனலை வேந்தர் தொலைக்காட்சி சேனலுக்கும் ஒப்பந்தம் போட்டு இணைந்து பணியாற்றினார். ஆனாலும் இந்த கூட்டணி எதிர்பார்த்த அளவுக்கு பார்வையாளர்களை உருவாக்கவில்லை என சொல்லப்படுகிறது. அதனால் அங்கிருந்தும் பாண்டேவை வெளியேற்ற இருப்பதாக நிர்வாகம் நினைப்பதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக பாண்டே தனது டிவிட்டரில் ‘வேந்தர் தொலைக்காட்சியுடனான ஒப்பந்தம் நவம்பர் மாதத்தோடு முடிகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.