செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 20 நவம்பர் 2019 (22:47 IST)

ரஜினி கட்சியில் இணையும் இரண்டு பிரபலங்கள்: புதிய தகவல்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்கி அரசியல் களத்தில் குதிக்க இருப்பது 100% உண்மை ஆகிவிட்ட நிலையில் தற்போது கட்சியைத் தொடங்கும் தேதி மற்றும் முதல் மாநாடு குறித்த ஆலோசனை நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
இந்த நிலையில் ரஜினியின் அரசியல் கட்சியில் பல முன்னணி பிரபலங்கள் மற்றும் பல்வேறு கட்சியில் உள்ள அரசியல் தலைவர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கிடைத்த செய்தியின்படி ரஜினியின் புதிய அரசியல் கட்சியில் கலைபுலி எஸ் தாணு மற்றும் ரங்கராஜ் பாண்டே ஆகிய இருவரும் இணைய இருப்பதாகவும் இவர்கள் இருவருக்கும் ரஜினி கட்சியிலிருந்து போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. ரஜினி கட்சியில் இப்போதைக்கு இருவரும் இணைவது உறுதியாகியுள்ளது நிலையில் இன்னும் யாரெல்லாம் அக்கட்சியில் இணைகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
அதே போல் கமல் கட்சியுடன் தேவைப்பட்டால் மட்டுமே இணைய இணைவோம் என்று ரஜினி கூறியிருந்தாலும் கமலின் கட்சியோடு இப்போதைக்கு இணையும் எண்ணம் ரஜினிக்கு இல்லை என்றும் கடைசி நேரத்தில் தேவைப்பட்டால் இணையலாம் என்பதற்காகவே அவர் அவ்வாறு கூறி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது