Daily Horoscope
✕

KPY பாலாவுக்கு 2 லட்சம் கொடுத்த பிரபலம்!.. எதுக்கு தெரியுமா?

Updated: சனி, 17 அக்டோபர் 2026 (11:52 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல காமெடி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று ரசிகர்களிடம் பிரபலமானவர் கே.பி.ஒய் பாலா. சம்பாதித்த பணத்தில் பெருமளவு பலருக்கு உதவுவதற்காகவே இவர் செலவிட்டு வருகிறார். ஏழைகள் பிழைப்பதற்கு வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக் கொடுப்பது, அருகில் மருத்துவமனை இல்லாத மலை கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, ஆட்டோ வாங்கி கொடுப்பது, பள்ளிக்கு செல்ல, பணிக்கு செல்ல ஏழைப் பெண்களுக்கு ஸ்கூட்டர் வாங்கி கொடுப்பது போன்ற பல சமூக சேவைகளை இவர் செய்து வருகிறார்.. காந்தி கண்ணாடி என்கிற திரைப்படத்திலும் பாலா நடித்துள்ளார்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் ஒரு முக்கிய தகவலை பாலா பகிர்ந்து கொண்டார். ‘நான் பொதுவாக அதிக விலைகளில் ஆடைகளை அணிய மாட்டேன்.. ஒருமுறை என்னை பார்த்த நடன இயக்குனர் கலா மாஸ்டர் ‘ஏன் இது போன்ற ஆடைகளை அணிகிறாய்?’ என்று கேட்டார்.

அதன் பின் நான் சம்பாதிக்க பணத்தில் பெரும்பளவு மற்றவர்களை கொடுத்து விடுகிறேன் என புரிந்து கொண்டவர் என் கையில் இரண்டு லட்ச ரூபாயை கொடுத்து ‘நல்ல உடைகளை வாங்கிக்கொள்.. இந்த பணத்தை நீ வேறு யாருக்கும் கொடுக்க கூடாது’ என கூறினார்’ என நெகிழ்ச்சியுடன் பேசினார்.<>
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

இசையமைப்பாளர் தேவா காலமானார்!.. திரையுலகினர் இரங்கல்!..

4 நாள் விடுமுறையில் ரூ.500 கோடியை தொடுமா ஜெயிலர் 2 ?

பிளாக்பஸ்டர் ஹிட்டான ஜெயிலர் 2...ரஜினியை சந்தித்த இன்பன் உதயநிதி!

ஜெயிலர் 2 சூப்பர் ஹிட்!.. வாழ்த்து தெரிவித்த சீமான்!...

சேரனின் ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ இன்று ஓடிடியில் ரிலீஸ்!...

அடுத்த கட்டுரையில்
Show comments